ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குருசேவக் சிங்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது

0 3426

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த புதன்கிழமையன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குருசேவக் சிங்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள விமானப் படை நிலையத்திற்கு குருசேவக் சிங்கின் உடல் வான் வழியாக கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது.

சொந்த ஊரான டான் தரன் (tarn taran) மாவட்டத்தில் உள்ள தோத் சோதியனில் (Dode Sodhian) குருசேவக் சிங்கின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கான வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments