ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு..!

0 2233

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு சிறிது நேரம் அபகரிக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டதாக டிவிட்டர் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய டிவிட்டர் அதிகாரிகள் பிரதமரின் கணக்கை மீட்டனர்.

இந்த குறுகிய காலத்தில் பிரதமரின் பெயரில் வெளியாகும் டிவிட்டர் பதிவுகளை புறக்கணிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொணடுள்ளது.

சந்தேகத்திற்கிடமான சில பதிவுகள் நீக்கப்பட்டு பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு சுமார் ஏழரை கோடி பேர் டிவிட்டரில் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments