நகைக்காக பாட்டியை கொலை செய்த பேரன் உட்பட 2 பேர் கைது

0 2782
நகைக்காக பாட்டியை கொலை செய்த பேரன் உட்பட 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே 5 சவரன் நகைக்காக பாட்டியை கொலை செய்த பேரன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடமாந்தூர் தக்கா கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அலிமாபீ வீட்டின் குளியலறையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் மகள் வழி பேரனான சல்மானிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவன் நகைக்காக மூதாட்டியின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சல்மானையும், அவனுக்கு உதவிய உறவினரையும் போலீசார் கைது செய்து பணம் மற்றும் தங்கத்தை மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments