மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதித்த ஒன்றரை வயது குழந்தை நலமுடன் உள்ளான் -சுகாதாரத்துறை

0 2106

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை குணமடைந்த நிலையில், அந்த வகை வைரஸ் பாதித்த 3 வயது சிறுவன் தொற்று அறிகுறியின்றி நலமுடன் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

புனே மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களுக்கு நைஜீரியாவில் இருந்து மும்பை திரும்பிய பெண் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குழந்தை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை அம்மாநிலத்தில் ஒமைக்ரான் பாதித்த 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments