கூலிப்படையினர் ஜாமீன் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள சின்னந்தையான்விளை கோவில் சுற்றுசுவரை தகர்க்க முயன்ற கூலிப்படையினர் எளிதில் ஜாமீன் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தை ஊர்மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிச்சைகாலன்சுவாமி கோவில் திருப்பணியின் ஒருபகுதியாக கோவிலுக்கு சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. இது தனிப்பட்ட நபரான முத்துலிங்கத்திற்கு பிடிக்காததால் கூலிப்படையை ஏவி சுற்றுசுவரை தகர்க்க முயற்சித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பாகி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், சுசீந்திரம் காவல்துறையினர் முறையாக வழக்கு பதியாததால் அவர்கள் மூன்றே நாளில் ஜாமீனில் வெளிவந்து ஊருக்குள் வலம்வந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Comments