சீனாவில் தங்க முலாம் பூசப்பட்ட 1,800 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு
சீன வரலாற்றிலேயே மிகவும் பழமை வாய்ந்த 2 புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மே மாதம் ஷாங்சி மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் 1,800 ஆண்டுகள் பழமையான கல்லறை அறை கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்குள் பத்தரை சென்டிமீட்டர் மற்றும் 16 சென்டிமீட்டர் உயரத்தில், தங்க மூலம் பூசப்பட்டு பித்தளையால் செய்யப்பட்ட 2 புத்தர் சிலைகள் கிடைத்தன. இதற்கு முன் 1,600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகளே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1,800 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் இருந்து பட்டுப்பாதை வழியாக சீனாவிற்கு பெளத்த மதம் பரவியதை இது உணர்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Comments