இந்திய தூதரகம் சார்பில் நேபாளத்தில் உணவு திருவிழா ஏற்பாடு ; காஷ்மீரின் பாரம்பரிய உணவுகளை சமைத்து சமையல் கலைஞர்கள் அசத்தல்
பிரதமரின் அசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் நேபாளத்தில் இந்திய தூதரகம் சார்பில் மாபெரும் உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை 75 வாரங்கள் அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடும் இந்த திட்டத்தின் கீழ் ஃபிளேவர்ஸ் ஆஃப் காஷ்மீர் என்ற பெயரில் உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பிரபல சமையல் கலை வல்லுநர்கள் கலந்து கொண்டு காஷ்மீரின் பாரம்பரிய உணவுகளை சமைத்து அசத்தினர். நேற்று தொடங்கிய இந்த திருவிழா வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Comments