ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் ஆலை உரிமையாளர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள ராயப்பளையம் பகுதியில் இயங்கிவரும் ஷீதர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் ஆலை உரிமையாளர் உயிரிழந்தார்.
ஆலையின் கழிவுநீர் தொட்டியிலிருந்து கசிந்த குளோரின் விஷவாயு, சுமார் 1 கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு சிரமத்துக்காளாகினர்.
ஆலையின் உரிமையாளர் தமோதரன் உயிரிழந்த நிலையில், சுற்றியிருந்த தறிப்பட்டறை, தோல்பட்டறை உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய 6 பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மொத்தம் 13 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர், விஷவாயு கசிவுக்குள்ளான இடம் தீயணப்புத்துறையினரால் அடைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Comments