பேரழிவின் ஆயுதமாக அமெரிக்க ஜனநாயகம் உள்ளதாகச் சீனா கருத்து
அமெரிக்க ஜனநாயகத்தைப் பேரழிவுக்கான ஆயுதம் எனச் சீனா வருணித்துள்ளது. ஜனநாயகம் குறித்து இரண்டு நாள் இணையவழி மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்தினார்.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். சீனா, ரஷ்யா, ஹங்கேரி ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜனநாயகம் என்பது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட அமெரிக்கா பயன்படுத்தும் 'பேரழிவு ஆயுதமாக' மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.
பனிப்போர்க் காலக்கட்டத்தில் இருந்ததுபோல் கொள்கை அடிப்படையில் நாடுகளைப் பிரித்தாள அமெரிக்கா முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments