கம்போடியாவில் களைக்கட்டிய அங்கோர்வாட் சர்வதேச கலைத் திருவிழா ; பட்டம் விட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்
கம்போடியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் அங்கோர்வாட் சர்வதேச கலைத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, உலகின் மிகப்பெரிய கோயிலாக கருதப்படும் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோயில் திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் கோயில் வளாகத்தில் ஆர்வத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே கோயிலுக்கு அருகேயுள்ள பகுதியில், குழந்தைகள் உட்பட பலரும் ஆர்வத்துடன் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
Comments