கேரளாவில் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடா? ஆளுநர்-முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இடையே முற்றும் பனிப்போர்
பல்கலைக்கழக உயர்மட்ட நியமனங்களில் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அது குறித்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே பனிப்போர் துவங்கியுள்ளது.
அதன் உச்சகட்டமாக, ஆளுங்கட்சியினரின் தலையீட்டை பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலையில் தாங்கிக் கொள்ள முடியாது என்றும், வேண்டுமானால் பல்கலைக்கழக சட்டவிதிகளை திருத்தி, முதலமைச்சரே வேந்தர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் எனவும் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி ஆளுநர் பரபரப்பை அதிகரித்துள்ளார்.
கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க பினராயி விஜயன் அரசு வற்புறுத்தி வரும் நிலையில், அது சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி தமது அதிருப்தியையும், கோபத்தையும் ஆளுநர் வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.
Comments