பாலஸ்தீன அகதிகள் முகாமில் வெடிவிபத்து ; 12 பேர் உயிரிழப்பு

0 1870
பாலஸ்தீன அகதிகள் முகாமில் வெடிவிபத்து ; 12 பேர் உயிரிழப்பு

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்தனர். லெபனானில் உள்ள ஒருசில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபட்டாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த மசூதிக்குப் பரவியது. அந்த மசூதியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments