காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறின
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதால் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின.
தக்கலையில் போலீசாரால் 2 ஆண்டுகளுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகள் காவல் நிலையத்தின் மாடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.
காலை அந்த பட்டாசுகள் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதால் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும், மக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்கூடமும் எரிந்து நாசமானது. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். விபத்தின் போது மக்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments