அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க சீன அரசு முடிவு
சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சீனாவின் முக்கிய நகரங்களில் 5-ஜி தொழில்நுட்ப சேவையை பரவலாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இ-காமர்ஸ் மற்றும் கணினித்துறை சார்ந்த தொழில்களில் முதலீடு அதிகரித்திருப்பதாகவும், சீனாவில் மக்களிடையே ஆன்லைன் மூலம் பொருட்கள் வழங்குவது கணிசமாக உயர்ந்திருப்பதாகவும், அந்நாட்டு புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தகவல் தொடர்புத்துறையில் முதலீடுகள் கணிசமாக உயரும் என அந்நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இயக்குநராக உள்ள ஸீ கன் (Xie Cun) தெரிவித்தார்.
Comments