ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

0 7432

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து தவறான கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பாரதியாரின் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராணுவ வீரர் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பேசியவர்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராணுவ வீரர் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பேசியவர்கள் குறித்து சி.ஆர்.பி.சியின் பவுர் இந்தியா முழுவதும் உள்ளது எனவே தமிழ்நாட்டில் பிபின் ராவத் மரணம் குறித்து தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாக, இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ள காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments