புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்

0 2322

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனமான பாசிக்கில் ஊதிய பாக்கி தொடர்பாக அதன் பணியாளர்கள் 48 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் ஊதியம் வழங்க கடந்த ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அதன் பிறகும் ஊதியம் வழங்காததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், வேளாண் துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments