ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், பலரது உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் டிஎன்ஏ உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் பிபின் ராவத்தின் தனிப்பாதுகாவலர்களான லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகிய இரு ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், விமானப்படையை சேர்ந்த 4 வீரர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்களது உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சாய் தேஜாவின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Comments