மதுரை மேம்பாலம் விபத்து: நிபுணர் குழு ஆய்வறிக்கைத் தாக்கல்!

0 2672

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்திற்கு ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாதது தான் காரணம் என நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

மதுரை புதுநத்தம் சாலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த மேம்பால கட்டுமானத்தின் ஒரு பகுதி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரு தொழிலாளர் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

மேலும் 6 கண்காணிப்பு பொறியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக நிபுணர் குழு அதன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு காரணம் எனவும், கர்டர் பொருத்தும் பணியின் போது தேசிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாததும் விபத்திற்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிபுணர் குழு, கர்டர் பொருத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், மேம்பால கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், முதலில் இணைப்பு சுவரை கட்டிவிட்டு பின்பு கர்டர் பொறுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments