புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதால், டிராக்டர்களில் ஏறிச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற விவசாயிகள்
டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிராக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.
இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்த விவசாயிகள், தங்கள் பொருட்களை டிராக்டர்களில் ஏற்றியதுடன் புறப்படுமுன் பஜனைப் பாடல்களைப் பாடினர்.
#WATCH | Farmers leave their site of protest, Singhu border (Delhi-Haryana border), after suspending their year-long protest against the 3 farm laws & other related issues pic.twitter.com/cts0zl4R4w
— ANI (@ANI) December 11, 2021
டெல்லி அரியானா எல்லையான சிங்கு என்னுமிடத்தில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் அணிவகுத்துப் புறப்பட்டு வெற்றிக் களிப்புடன் சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
Comments