6 வார கால கருக்கலைப்பு விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை..!
அமெரிக்காவில் 6 வார கால கருவை கலைப்பதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து, வெள்ளை மாளிகை கவலை தெரிவித்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில், 6 வார காலத்தை தாண்டிய கருவை கலைப்பதற்கு தடை விதித்து, கடந்த செப்டம்பரில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான வழக்கில், டெச்காஸ் மாகாணத்தின் முடிவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டன் உட்பட பல்வேறு மாகாணங்களில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமலில் இருந்த, 20 வார காலம் வரையிலான கருவை கலைக்கலாம் என்ற நிலையே தொடர வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமை போன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டெக்சாஸ் மாகாணத்தின் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், போராட்டக்காரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறு.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிபர் ஜோ பைடனை மிகவும் கவலைப்படச் செய்துள்ளதாகவும், இத்தீர்ப்பு அமெரிக்காவின் மகளிர் உடல்நலன் பாதுகாப்புச் சட்டத்திற்கு சிக்கல்களை உண்டாக்கியிருப்பதாகவும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி (JEN PSAKI) தெரிவித்துள்ளார்.
Comments