ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

0 1998

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், இரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ஜுன மண்டபத்தில் அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் புடைசூழ மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments