ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சட்டப்பேரவைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காங்கிரஸ் மாணவர் அணியினர்.. போலீசார் தடியடி

0 2273

டிசா மாநிலம் புவனேசுவர் நகரில் ஆசிரியர் மமிதா மெஹர் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக அமைச்சர் திப்யா சங்கர் மிஸ்ரா மீது குற்றம் சாட்டி அவர் ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்களும் மாணவர் அணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

சட்டமன்றத்திலும் நவீன் பட்நாயக் அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கோஷம் எழுப்பினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments