2021 நவம்பரில் பயணியர் வாகன விற்பனை முந்தைய ஆண்டைவிட 19 சதவிகிதம் வீழ்ச்சி
செமி கண்டக்டர் சிப்களின் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் நவம்பர் மாதத்தில் பயணியர் வாகனங்களின் விற்பனை 19 விழுக்காடு குறைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2020 நவம்பரில் 2 இலட்சத்து 64 ஆயிரத்து 898 வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு நவம்பரில் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 626 வாகனங்கள் விற்றுள்ளன.
செமி கண்டக்டர் எனப்படும் சிப்களின் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் வாகன உற்பத்தியும், அதன் தொடர்ச்சியாக வழங்கலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது ஏழாண்டுகளில் மிகக் குறைந்த விற்பனை அளவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments