ஜெயலலிதா மரணம் விவகாரம்-சந்தேகம் உள்ளதால் சசிகலாவை விசாரிக்க வேண்டும்-ஜெ.தீபா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது சந்தேகம் உள்ளதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவிக்ககோரி, அவரது அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில், வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர், ஜெ.தீபா மற்றும் தீபக்கிடம் சாவியை ஒப்படைத்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு வந்து, கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் அனைத்து அறைகளையும் பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, வீடு காலியாகவே உள்ளதாகவும் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் எந்த பொருட்களும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்த வீட்டிற்கு குடிவர வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும் ஜெ.தீபா குறிப்பிட்டார்.
Comments