மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பீகார் இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பீகாரைச் சேர்ந்த இளைஞரை மீட்ட மனநல மறுவாழ்வு மையத்தினர், இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹீராலால் சௌத்ரி என்ற 24 வயதான அந்த இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை வெளியேறி, வெவ்வேறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து தமிழகம் வந்திருக்கிறார். சீர்காழியில் கையில் கட்டை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சௌத்ரியை கடந்த அக்டோபர் மாதம் மீட்ட மனநல மறுவாழ்வு மையத்தினர், அவருக்கு சிகிச்சை அளித்து இன்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு மகனை பார்த்த நெகிழ்ச்சியில் சௌத்ரியின் தந்தை, மாவட்ட ஆட்சியர் லலிதாவின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
Comments