108 நாடுகள் சர்வதேச பயணத்திற்காக இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன - சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்

0 3214

மொத்தம் 108 நாடுகள் சர்வதேச பயணத்திற்காக இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன.

இந்த நாடுகளுக்கு இந்தியாவில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் எந்த சிக்கலும் இன்றி சென்று வரலாம் என சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் இந்த நாடுகளின் பட்டியல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் அதை சரி பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments