வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 3690

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினம் கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments