ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீண் யூகங்களை பரப்பாதீர் - இந்திய விமானப்படை
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்துப் புலனாய்வு செய்ய முப்படை அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைத்துள்ள நிலையில், இறந்தோரின் கண்ணியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், ஊகங்களைத் தவிர்க்கும்படி இந்திய விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், டிசம்பர் எட்டாம் நாள் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக் குறித்துப் புலனாய்வு செய்ய முப்படையினர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும் என்றும், அதுவரை உயிரிழந்தோரின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து ஊகங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
Comments