ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் - பிரதமர் ஸ்காட் மாரிசன்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ஃபைசெர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், மாடெர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீத மக்களுக்கு 2 டோஸ் கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதோடு, 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 70 சதவீத பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Comments