இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் ககன்யான், 2023-ஆம் ஆண்டு தொடங்கும்.. மத்திய அரசு தகவல்

0 2366

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் ககன்யான், 2023-ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அவர்,  இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடிக்கும் என்றார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நமது விண்வெளித் திட்டங்கள் தாமதமாகியுள்ளன என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments