குருவிக்கார பெரியவரை இறக்கிவிட்ட ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்டு

0 6376
குருவிக்கார பெரியவரை இறக்கிவிட்ட ஓட்டுனர்... நடத்துனர் சஸ்பெண்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  அரசு பேருந்தில் இருந்து  வயதான குருவிக்கார பெரியவரின் குடும்பத்தை இறக்கிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குளச்சல் மீனவப்பெண்ணை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனர், நடத்துனர், நேரக்காப்பாளர் ஆகிய 3 பேரை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறிய குருவிக்காரர்களை அந்த பேருந்தின் நடத்துனர், ஏற்ற மறுத்து இறக்கிவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு போக்குவரத்து கழக இணை இயக்குனர் ஜெரோலின், பேருந்தில் பிச்சை எடுப்பதற்காக ஏறிய அவர்கள், ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதம் செய்ததாகவும், அவர்களை கீழே இறக்கிவிடுமாறு நடத்துனர்களிடம் சக பயணிகள் கூறியதால் இரண்டு முதியவர்களையும், அவர்களுடன் வந்த சிறுவனையும் நடத்துனர் கீழே இறக்கிவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தின் உண்மைதன்மையை அறிய, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் பேருந்தில் இருந்து பெரியவரையும் அவரது மனைவி மற்றும் சிறுவனை இறக்கிவிட்ட குற்றத்திற்காக பேருந்து நடத்துனர் நெல்சன், ஓட்டுனர் ஜெயபாலன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments