சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடை ஜனவரி வரை நீட்டிப்பு

0 4602

சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 15ந் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் இயல்பான நிலைக்குத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து பன்னாட்டுப் பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ந் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 32 நாடுகளுடன் மேற்கொண்ட தற்காலிக ஒப்பந்தத்தால் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments