ராமநாதபுரத்தில் நகை, பணத்திற்காக ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நகை, பணத்திற்காக ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ரயில்வே ஊழியர் காளியம்மாள் , அவரது மகள் மணிமேகலை ஆகியோர் கடந்த 7-ம் தேதி காலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், காளியம்மாள் கட்டி வந்த புதிய வீட்டில் கட்டிட வேலை பார்த்த இலங்கை அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து புதுக்கோட்டை அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார், கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சேதமடைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 20 நாட்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டதாகவும், அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளனர்.
Comments