ஒமைக்ரான் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன்

0 3609

ஒமைக்ரான் வைரஸ் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தி உள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பரவும் நிலையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவர் காணொலியில்  ஆலோசனை நடத்தினார்.

அப்போது  கொரோனா சிகிச்சைக்கு அவசியமான எட்டு மருந்துகள் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஒருவேளை கொரோனா அலை மீண்டும் வீசினால் அதை எதிர்கொள்ளும் வகையில் எல்லா மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments