திண்டுக்கல்லில் விவசாயிகளிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது..!

0 4427

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் விவசாயிகளிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேணான்கோட்டை பகுதி  துணை மின் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி மின் பொறியாளர் ரவிக்குமாரிடம், தன் தந்தை இறந்த காரணத்தால் மின் இணைப்பு பெயர்மாற்றம் கோரி தங்கவேலு என்பவர் விண்ணப்பித்துள்ளார்.அதற்கு லஞ்சமாக பத்தாயிரம் கேட்டதாக லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தங்கவேலு தகவல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, துணைமின் நிலைய அலுவலகத்திற்கு மாறுவேடம் அணிந்து  வந்த அதிகாரிகளில் ஒருவர், லஞ்சமாக கொடுத்த ரசாயனம் தடவிய  ஆறாயிரம் ரூபாயை வாங்கிய போது, மறைந்திருந்த அதிகாரிகளிடம் கையும் களவுமாக ரவிக்குமார் பிடிப்பட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments