ஹெலிகாப்டர் விபத்தின் இறுதி நிமிடக் காட்சிகள் : கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த பரபரப்பு காட்சி !
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தின் இறுதி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத் பயணமான ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அடுத்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் மரங்கள் நிறைந்த இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளாவதற்கு முன் பனிமூட்டத்திற்குள் ஹெலிகாப்டர் நுழைந்த காட்சி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது குடியிருப்புகளுக்கு அருகே நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர், கரும்புகையுடன் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments