மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்காக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்..!
வணிகப் பயன்பாட்டு வாகனங்கள், மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்காக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே உள்ள வணிகப் பயன்பாட்டு வாகனத் தயாரிப்புக்குப் புத்துயிரூட்டவும், மின்சார வாகனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அடுத்த ஐந்தாண்டுகளில் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக டாட்டா மோட்டார்ஸ் செயல் இயக்குநர் கிரிஸ் வாக் தெரிவித்துள்ளார்.
Comments