ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லி வந்து சேர்ந்தன

0 4744

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லி சென்றடைந்தன.

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, இந்திய விமானப் படையின் சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

இரவு 7.40 மணி அளவில் பாலம் விமான நிலையத்தை அந்த விமானம் சென்றடைந்தது. விமானத்தில் இருந்து உடல்களை இறக்கி ராணுவ வீரர்கள் அஞ்சலிக்காக எடுத்து சென்றனர்.

பிபினி ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி இரவு 9.05 மணிக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரவு 9.15 மணிக்கு அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments