தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரிப்பன் மாளிகையில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்களர் பட்டியலை வெளியிட்டார் ககன் தீப் சிங் பேடி

0 2761

தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்களர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகள், மொத்தமுள்ள 150 நகராட்சிகளில் 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன.

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை, தேனி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கரூர், கோவை, விழுப்புரம், திருபத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களால் வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments