பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் கொண்டு செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை வாகனம் விபத்து.!

0 5405

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் சூலுருக்கு கொண்டு செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது.

பரளியார் என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்று, தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த வாகனத்தில் இருந்த காவலர்கள் சிலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனத்தை தொடர்ந்து, உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது.

மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் சாலையில் கேரம்பாளையம் என்ற இடத்தில், உடல்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகானம் முன்னால் சென்ற மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மோதிக் கொண்டது.

இதனையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த உடல் வேறொரு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மாற்றப்பட்டு சூலூர் கொண்டு செல்லப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments