ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த தீக்காயமடைந்த விமானி வருண் சிங்கை சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்ல ஏற்பாடு.!

0 3134

நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த தீக்காயமடைந்த விமானி வருண் சிங்கை சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், க்ரூப் கேப்டனான விமானி வருண் சிங் பலத்த தீக்காயமடைந்தார்.

இதனை அடுத்து வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வருண் சிங்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

85 சதவீதம் வரை தீக்காயம் அடைந்த அவரது உடல் நிலை மோசமாக இருந்தாலும், முக்கிய உறுப்புகள் தொடர்ந்து சீராக இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் என்றும் அதுவரை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிர் தப்பிய விமானி வருண் சிங் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி குடியரசு தலைவரிடம் செளரியா சக்ரா  விருதை பெற்றுள்ளார்.

வீர தீர செயலுக்காக வழங்கப்படும் இந்தியாவின் 3-வது உயரிய விருதை கேப்டன் வருண் சிங்  பெற்றுள்ளார். 2020-ஆம் ஆண்டில் விங் கமாண்டராக பணியாற்றியபோது அக்டோபர் 12 ஆம் தேதி , இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை இயக்கும் பயிற்சியின் போது, மிக உயரத்தில் பறந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் கட்டுபாட்டை இழந்தது.

அப்போது சமயோஜிதமாக செயல்பட்ட கேப்டன் வருண் சிங் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விபத்தை தவிர்த்தார். அவர் இப்போது வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் directing staff-ஆக பணியாற்றி வருகிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங் ஏர் ஏம்புலன்ஸ் மூலம் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். 

நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த தீக்காயமடைந்த விமானி வருண் சிங் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், க்ரூப் கேப்டனான விமானி வருண் சிங் பலத்த தீக்காயமடைந்தார்.

இதனை அடுத்து வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வருண் சிங்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 85 சதவீதம் வரை தீக்காயம் அடைந்த அவரது உடல் நிலை மோசமாக இருந்தாலும், முக்கிய உறுப்புகள் தொடர்ந்து சீராக இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வருண் சிங் சூலூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments