பாலியல் புகார் வழக்கில் தாம் நீதிபதியாக இருந்திருக்கக் கூடாது ; ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகய்

0 3090
பாலியல் புகார் வழக்கில் தாம் நீதிபதியாக இருந்திருக்கக் கூடாது

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் எழுதிய ‘Justice for the Judge’.சுயசரிதை புத்தகத்தில் தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கைக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

தம் மீது புகார் கூறப்பட்ட நிலையில் மூன்று நீதிபதிகளில் ஒருவராக அந்த வழக்கை தாம் விசாரித்திருக்கக் கூடாது என்று கோகய் தெரிவித்துள்ளார்.தாம் தவறு செய்து விட்டதாக அந்தப் புத்தகத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆயினும் தம்மை குற்றமற்றவர் என்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தாம் கையெழுத்து இடவில்லை என்றும் கோகய் தெரிவித்தார். 45 ஆண்டுக்கால வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒருவர் மீது இத்தகைய பாலியல் புகார் தொடுக்கப்பட்டு நீதித்துறையின் மாண்பையே களங்கப்படுத்தியதாகவும் கோகய் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments