அரசு சிற்றுந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மாணவன்... திருக்குறள் எழுத வைத்து கண்டித்து அனுப்பிய காவல்துறை
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சிற்றுந்தின் கண்ணாடியை உடைத்த மாணவனை திருக்குறள் எழுத வைத்து கண்டிக்கப்பட்டார்.
ஆவடியிலிருந்து சிரஞ்சீவி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த சிற்றுந்தின் பின்பக்க கண்ணாடியை பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உடைத்ததாக கூறப்படுகிறது.விசாரணையில் ”தான் திட்டமிட்டு தாக்கவில்லையெனவும், அது தற்செயலாய் நடந்துவிட்டதாகவும்” மாணவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவரை திருக்குறள் எழுதும்படி அறிவுறுத்திய காவல் ஆய்வாளர், இது போன்ற சம்பவங்களில் இனி ஈடுபடக்கூடாதென எச்சரித்து அனுப்பிவைத்தார்.
Comments