ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் ; சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்

0 3491
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எகுவரகட்டா கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சாய் தேஜா, லேன்ஸ் நாயக் பதவி வகித்தார். தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த விநாயகர் சதுர்த்திக்கு சாய் தேஜா சொந்த ஊர் வந்து சென்ற நிலையில், தற்போது அவர் உயிரிழந்த தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சாய் தேஜா உடலை காண அவரது மனைவி ஷர்மிளா, மகன், மகள் மற்றும் உறவினர்கள் குன்னூர் விரைந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments