இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் அமல் - போரீஸ் ஜான்சன்

0 2259

இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை பிரதமர் போரீஸ் ஜான்சன் அமல்படுத்தியுள்ளார்.

ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியவும், பொதுவெளிகளில் முக கவசம் கட்டாயம் அணிவது மற்றும் வேக்சின் பாஸ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், பார்கள், கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிரதமர் போரீஸ் ஜான்சன், ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த தகவல்கள் இல்லாவிட்டாலும், முந்தைய டெல்டா வகைகளைவிட வேகமாக பரவி வருவதாக தெரிவித்தார். மக்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments