டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது என பரப்பப்படும் தகவல் தவறானது - அதிகாரிகள்
டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது என பரப்பப்படும் தகவல் தவறானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TNPSC, TRB, MRB உள்ளிட்ட தேர்வுகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் எனவும், தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தம் செய்யப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தவறான தகவல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் தமிழ் பாடம் படிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தாலும் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையில் தமிழ் கேள்வித் தாள் இடம் பெறும் என்று தனியார் பயிற்சி மையத்தினரும் தெரிவித்துள்ளனர்.
Comments