ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு

0 18194

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபின் ராவத் சென்ற போது பிற்பகல் 12.27 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ரிகேடியர் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், இராணுவ வீரர்கள் நாயக் குருசேவாக் சிங், நாயக் ஜிதேந்திரா குமார் ஆகியோரும் பயணித்தனர். நஞ்சப்புரா சத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது...

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகாப்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்து, விபத்தில் சிக்கியவர்கள் மீட்க முயன்றனர். விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

பிபின் ராவத் பயணமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக டிவிட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மீட்பு பணி குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 13 பேர் பலியானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின உடல்களும் நாளை டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments