விழுப்புரம் அருகே நிகழ்ந்த தாய்-மகள் கொலை வழக்கில் இளைஞன் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய்-மகள் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரோஜா மற்றும் அவரது மகள் பூங்காவனம் நேற்று ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சாலையோரம் படுத்திருந்த அஞ்சம்மாள் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் மீதும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இவ்வழக்கில் தொடர்புடையதாக திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கவிதாஸ் என்பவரை, கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 2 கம்மல், ஜிமிக்கி உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments