பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்ட மாணவிகள்

0 6110

சென்னை அடுத்த ஆவடி, பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

முதலில் இரு மாணவிகளுக்கு இடையே உருவான சண்டை, பின்னர் இருகுழுக்களுக்கு இடையேயானதாக மாறியது. ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டு ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் சண்டையை தடுக்க முயன்றும், முடியவில்லை. மாணவிகளின் சண்டைக்கான காரணம் குறித்த காரணம் இன்னும் தெரியவராத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments