2028ஆம் ஆண்டுக்குள் 6 வகை மின்சாரக் கார்களை இந்தியாவில் தயாரிக்க ஹுண்டாய் திட்டம்!
2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆறு வகை மின்சாரக் கார்கள் தயாரிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நாலாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கோனா என்கிற மின்சாரக் காரைத் தயாரித்து வரும் நிலையில் மேலும் 6 வகை மின்சாரக் கார்களை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் வகை மின்சாரக் கார் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என்றும், இதற்கான ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவில் நாலாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஹுண்டாய் இந்தியா தலைவர் கிம் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கார்களுக்கான பேட்டரியை முதலில் வெளிநாடுகளில் இருந்து வாங்க உள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலேயே பேட்டரி தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments